இராஜீவ் கொலை (தெரிந்தே மறைக்கப்படும் – மறுக்கப்படும்) தகவல்கள்

மௌ.அர.ஜவஹர், பழனி.

இராஜீவ் காந்தியின் தமிழர் விரோதப் போக்கும், சமூகநீதிக்கு எதிரான போக்கும் மன்னிக்க முடியாத செயல்பாடுகள்தான். ஆனால் வரலாறு ஒற்றைப் பார்வையுடன் பார்க்கப்படுமானால் அது சமூக வரலாற்றுத் துரோகம். எல்லாப் பின்னணிகளும் பாரபட்சமின்றிப் பார்க்கப்பட வேண்டும்.

இராஜீவ் கொலை இது இரண்டு பார்வைகளாக மட்டும் பார்க்கப்படுகிறது.

 1. இராஜீவ் கொலை கொடுக்கப்பட வேண்டிய மரணதண்டணை. இது ஒரு பார்வை,
 2. இராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதம். இதுவும் அடுத்த பார்வை.

அதாவது இராஜீவ் கொலைக்கான சதி என்பதைப் புலிகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி, இக்கொலையின் பின்னணியில் உள்ள பார்ப்பன மற்றும் சர்வதேசச் சக்திகளை அம்பலப்படுத்த மறுக்கிறன. இப்பார்வைகள்.

கொலைச் சதியில் பார்ப்பனர் பங்கு

கொலைச்சதியில் அமெரிக்கச் சார்பாளரும் பார்ப்பன தமிழ், தமிழர் விரோத சுப்பிரமணிசுவாமியின் தொடர்புகள் பற்றி ஆதாரங்கள் அடங்கிய புத்தகம் ”ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம்” (திருச்சி வேலுச்சாமி, பேட்ரிஷியா பதிப்பகம்.) இப்புத்தகத்தில் பக்கத்திற்குப்பக்கம் ஆதாரங்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

சந்திராசுவாமி, சுப்பிரமணியசுவாமி இவர்களது தொடர்புகள் இராஜீவ் கொலைச் சதியில் ஆழமாக இருப்பதைக் குறிப்பது மட்டுமில்லாமல், இதே ஆவணத்தை ஜெயின் கமிஷனிலும் சமர்ப்பித்துள்ளனர்.

கொலைச் சதியில் சர்வதேசப் பின்னணி

ஒவ்வொரு தலைவர்களின் படுகொலைகளுக்குப் பின்னால் ஒரு சர்வதேச ஆதிக்கச் சக்தியின் நலன் இருக்கும்.

தன்னை யார் கொலை செய்வார்கள் என்பதுபற்றி இராஜீவே வெளிப்படுத்திய தகவல்கள்

 1. ”இந்தியாவும், இந்தியத் தலைவர்களும் சில வெளிநாட்டுச் சக்திகளால் குறி வைக்கப்பட்டுள்ளனர். தலைவர்களைக் கொல்லச்சதி நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் போராட வேண்டிய காலகட்டத்தில் நம் நாடு இருக்கின்றது”

(தமிழ் நாட்டிற்குப் புறப்படும்போது டெல்லி விமான நிலையத்தில் அளித்த பேட்டி)  -நக்கீரன் – 01.06.1991

 1. தான் சாவதற்கு முன் அளித்த பேட்டியில், (தெற்காசியப் பகுதியில்) இந்தியா ஆற்றும் பங்கு அதிகமாகி உள்ள நிலையில், இந்தியாவும், இந்தியத் தலைவர்களும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு இலக்குகள் (Targets) ஆகக் கூடும் என்றும், சோவியத் நாட்டிலிருந்து அந்த ஆபத்து இல்லை என்றும் ராஜீவ் தெரிவித்தார். C.I.A. அந்த சக்தியாக இருக்குமா என்று கேட்டதற்கு இராஜீவ் நமட்டுச் சிரிப்பைப் பதிலாக அளித்தார். (இதனை நியூயார்க் டைம்ஸ் எனும் ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது) – The Hindu 24.05.1991
 2. 1988 ஆகஸ்டில் ஜியா (அப்போதைய பாக்கிஸ்தான் அதிபர், இராணுவத் தளபதி) விமான விபத்தில் இறந்ததை இராஜீவ், தன்னைப் பேட்டி கண்ட நீனா கோபாலிடம் அது கொலை என்று சொல்லி பின்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

”நானும் ஜியாவும் காஷ்மீர் பற்றி ஒரு சமரசத்தை முடிக்கும் தருவாயில் இருந்தோம். தேச வரைபடம் உள்ளிட்டு அனைத்தும் கையெழுத்தாகத் தயாராக இருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு விட்டார்” இந்தியா பாக்கிஸ்தான் நல்லுறவை விரும்பாத வெளிநாட்டுச்சக்தி நல்லுறவு முயற்சியைச் சீர் குலைக் கிறது.” ஏற்கனவே இந்திரா காந்தி தான் C.I.A.வால் கொல்லப்படலாம் என பலமுறை கூறியுள்ளார். – Front Line  08.06.1991

கொலைக்கான காரணம்???

 1. Trieste என்பது இத்தாலிக்கும், யூகோஸ்லாவியாவுக்கும் இடையில் இருந்த பிரச்சனைக்குரிய பகுதியாகும். இப்பிரச்சனையைத் தீர்க்க இப்பகுதி இவ்விரு நாடுகளுக்கும் பொதுவான பகுதியாக ஆக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைதான் காஷ்மீரில் செயல்படுத்த இராஜீவும், பாகிஸ்தான் அதிபர் ஜியாவும் முயன்றனர்.
 2. வளைகுடாப் போரின் தீர்வுக்கு ‘இராஜீவ் ஃபார்முலா’ உருவாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதன்படி ‘ஈராக் வெளியேற்றம்’ பாலஸ்தீனப் பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருந்தது. இது அய்.நா.வின் (அமெரிக்கச் சார்பான) பாதுகாப்பு அவையின் தீர்மானத்திற்கு எதிராக இருந்தது. (அப்போதைய) பிரதமர் சந்திரசேகரின் நிலை இரண்டுங் கெட்டானாக இருந்தது. காங்கிரஸ் அதைக் கண்டித்தது. – BLITZ 02.02.1991
 3. காங்கிரஸில் சீதாராம் கேசரி (இராஜீவின் நம்பிக்கைக்கு உரியவர்) ஒரு அறிக்கை மூலம் அமெரிக்க எதிர்ப்பைக் கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு பொதுமக்கள் கருத்தில் அமெரிக்க எதிர்ப்பை வளர்ப்பதன் மூலம் சந்திரசேகரை பணிய வைக்கவே இது திட்டமிடப்பட்டது. – BLITZ 02.02.1991
 4. அணி சேரா நாடுகளின் அமைப்பை முடுக்கிவிட்டு அய்.நா.சபை ஒரு நாட்டின் ஆதிக்கத்திற்குக்கீழ் இருப்பதை மாற்றக் குரல் கொடுத்தார் இராஜீவ்.
 5. வளைகுடாப் போரின்போது சந்திரசேகர் அரசு ஒன்றும் செய்யாததால் சமாதான முயற்சிக்குக் கோர்ப்பச்சேவை இரஷ்யாவில் சந்திக்கச் செல்வதாக ஜோதிபாசுவிடம் இராஜீவ் தெரிவித்தார்.
 6. ஜோதிபாசு அவர்கள் நிதி ஆதாரத்திற்கு நாம் IMF அய்த்தானே சார்ந்துள்ளோம் என்று இராஜீவிடம் கேட்டதற்கு இராஜீவ், ”நாம் ஏன் ஜப்பானிடமும், ஜெர்மனியிடமும் கேட்பதைப்பற்றி ஆராயக்கூடாது?” என்று கூறிவிட்டு அமெரிக்காவுடன் ஜெர்மனி எல்லா விசயத்திலும் ஒத்துப்போவதில்லை. வளைகுடாப் போரில் அமெரிக்காவுடன் தயக்கத்துடனேயே ஜெர்மனியும், ஜப்பானும் சேர்ந்தார்கள் என்று இராஜீவ் குறிப்பிட்டார். :-Front Line 08.06.1991

 ( இன்னும் அதிகத் தகவல்களுக்கு “ராஜீவ் கொலையும் சதிகளும்”  – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு” என்ற நூல்). வெளியீடு: திராவிடர் மனித உரிமை அமைப்பு )

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.