பார்ப்பன – இந்திய பெரிய நிறுவனங்கள் – பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளைக்குச் சாதகமானதே GST

மௌ.அர.ஜவஹர், பழனி

1.நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் கடமைக்காகவாவது நடந்து கொண்டிருந்தது, நடந்து கொண்டிருக்கிறது. அதில்தான் மக்களுக்கான சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தது. இனிமேல் அதுகூடக் கூடாது என்று ஆதிக்க மனப்பான்மையில் வெறும் 31 பேரைக் கொண்டு GST COUNCIL மூலமாகவே மாதம் ஒரு முறையோ மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ வரி விதிப்புகள் பார்ப்பன – இந்திய பெரிய நிறுவனங்கள் – பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களுக்காகவும் மாநிலங்களில் உள்ள பார்ப்பன அடிவருடிகளின் நிறுவனங்களுக்காகவும் மட்டுமே முடிவு செய்யப்படும்.

2. எதிர்காலத்தில் மாநில நிதி மந்திரி என்ற போர்வையில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத பார்ப்பனக் கூட்டுக் கொள்ளையரின் கைக்கூலிகள் நிதி மந்திரிகளாக ஆவதற்கும் வாய்ப்புண்டு.

3. GST Councilல் மத்திய நிதிமந்திரிக்கு மூன்றில் ஒரு பங்கு அதிகாரம் உண்டு.மேலும் ரத்து செய்யும் அதிகாரம் அதாவது Veto Power உண்டு.

4. பெட்ரோல், டீசல் மூலம் மத்திய, மாநில அரசுகள் வருவாய் ஈட்டி வருகின்றன. அதனால்தான் திட்டமிட்டே இவற்றை GST வரம்புக்குள் கொண்டு வரவில்லை.

5. Input Creditக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுபவர்கள் இந்த GST வரி விதிப்பில் உள்ளவர்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் போக்குவரத்து பெட்ரோல், டீசல் சலுகைக்கான வரிகளை inputஆக எடுக்க முடியாது என்ற வேதனையான கொடுமையைப்பற்றி வாய் திறப்பதில்லை.

6. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு என்பது இல்லை. எனவே ஆடிட்டர்களில் இட ஒதுக்கீடு கிடையாது. ஏற்கனவே இருந்ததை விட இனி ஆடிட்டர்களின் ஆதிக்கம் இன்னும் தலைவிரித்தாடும். இந்தியாவில் உள்ள 2,00,000 ஆடிட்டர்களில் மிகப் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களே! [ வருமான வரித்துறை பார்ப்பனர், பார்ப்பன ஆடிட்டர்கள் இவர்களின் கூட்டுதான் வளரும்,வளர்ந்த பார்ப்பனரல்லாத பணக்காரர்கள், ஊழல் அரசியல்வாதிகள் போன்றோரை பார்ப்பனரை நத்திப்பிழைத்துக் கொண்டே பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவான நிலையிலேயே வைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது ]

7. உலகில் GST வரி வசூல் அமுல்படுத்திய நாடுகள் மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. ஆனால் இங்கு அப்படி எந்த உத்திரவாதமும் இல்லை.

8. பங்குச் சந்தைக்கு GST கிடையாது. இது மிகப்பெரிய மோசடி.

9. உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டுக்கு GST யால் மிகுந்த பாதிப்பு.

10. அம்பானி,அதானி,டாடா……போன்றோருக்கு வரி விகிதம் குறைவு. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு வரி விகிதம் அதிகம்.

11. Transparent (வெளிப்படையான) நிதி நிர்வாகம் என்ற போர்வையில் சாதாரண பார்ப்பனரல்லாதோர் தொழில்களை அவர்களிடமிருந்தே தொழில் பற்றிய Turn over விபரத்தை ஒரு சில நாட்களிலேயே டெல்லி தெரிந்து கொள்ளும் இந்தச் செய்திகள் மேற்சொன்ன பார்ப்பன – இந்திய பெரிய நிறுவனங்கள் – பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டுச் சக்திக்குச் செல்லும்.அதிக வருமானம் இருப்பின் அதை அவர்கள் கையில் எடுத்துக் கொள்வர் ( உப்பு வியாபாரம் டாடா போன்றோர் கைக்குச் சென்றதைப் போன்று)[ மாநில அரசால் இந்த Dataவைப் பார்க்க முடியுமா? ]

12. இனி மாநில அரசு பட்ஜெட்டிலும் மய்ய அரசு பட்ஜெட்டிலும் பெரிய முக்கியத்துவமான விசயம் இருக்காது.

13. மாநில அரசு அரசூழியருக்கு சம்பளம் மட்டுமே கொடுக்க முடியும்.புதிய மற்றும் பெரிய திட்டங்கள் தொடங்க முடியாது. வறட்சி,வெள்ளம்,புயல் போன்ற பாதிப்புகளின்போது நிவாரண நிதிக்கு இனி மய்ய அரசிடம் கேட்டுக் கேட்டுக் கெஞ்சிக் கெஞ்சி சாக வேண்டியதுதான்.புதிய அரசு ஊழியர் நியமனம் குதிரைக் கொம்பே!

14. மாநில வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு இனி என்ன அதிகாரங்கள் இருக்கப்போகிறது?

15. பெரும்பாலான பொருட்களுக்கு 18%ல் வரி உள்ளது.

16. பாராளுமன்ற நிகழ்ச்சிகளே T.V.யில் நேரடியாக ஒளிபரப்பப்படும்போது GST Council நிகழ்ச்சி ஏன்
காட்டப்படவில்லை?

17. வரி வசூல் குறைந்தால் அந்த வரியை வசூல் செய்து தரும் ஒரு அடியாளாக மட்டும் மாநில அரசுகள் இனி இருக்கும்.

18. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது எப்படி வியாபாரம் மந்தமோ அதோ அதைப்போல தற்போதும் சில வியாபாரங்கள் சில நாட்களுக்கும் சில வியாபாரங்கள் சில மாதங்களுக்கும் மந்தமாக இருக்கும்.

19. வெளியூரில் தங்கி சாப்பிட்டு வேலை செய்பவர்கள் படிப்பவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 300 ருபாய்க்கு சாப்பிட்டாக வேண்டும். 1ம் தேதிக்குப் பின் 336 ருபாய் ஆகிவிடும்.

20. மத்திய அரசு தன்னுடைய அரசுத் துறைக்குச் சேவை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சேவை வரியிலிருந்து விலக்குக் கொடுத்துள்ளது. (எ.கா. பாஸ்போட்–TCS கம்பெனி –டாடா நிறுவனம்).இதன் காரணமாக இதில் உள்ள 9% மாநில அரசின் பங்கு கிடைக்காமல் போய்விடுகிறது.ஆனால் இதைப்போல மாநில அரசுக்குச் சேவை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சேவை வரி விலக்குக் கொடுத்ததாகத் தெரியவில்லை.இதிலிருந்து கிடைக்கும் 9% வரியும் மத்திய அரசுக்கே போய்ச்சேருகிறது.

21. Neutrality – சமநிலைப்படுத்துதல்.ஏற்கனவே மத்திய,மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்ட வரிகளின் (16 வகைகள்) கூட்டுத்தொகையையேதான் GST க்குப் பிறகும் வசூலிக்க இருப்பதாக மத்திய அரசு கூறிக்கொள்கிறது.ஆனால் ஒரு கோடியே பத்து லட்சம் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை புதிய GSTக்கு கீழ் கொண்டு வரத்திட்டம் உள்ளது.சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் புதிதாக வரிக் கட்டுவார்கள் எனவே வரியின் அளவு அதிகரிக்கும்.இதன் அடிப்படையில் இந்திய பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் வரி குறைக்கப்படும் எனபது புலனாகிறது. இது மட்டுமல்ல மத்திய அரசுக்கான வரி வரவை அதிகப்படுத்துவதும்தான் இதன் உள் நோக்கம் ஆகும்.மாநிலத்துக்கான வரி வருவாய் வரவைக் குறைப்பது என்கிற உள்நோக்கமும் அடங்கியுள்ளது.( இதன் காரணமாக உற்பத்தி மாநிலமான தமிழ்நாடு கடும் பாதிப்புக்கு உள்ளாகும்).இது அடுத்த ஆண்டு நன்கு தெரியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.