பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம்!

மௌ.அர.ஜவஹர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளன. அவை இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. தற்போது 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இதுவும் சேர்த்து 54 நீதிபதிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. உள்ளனர். 21 இடங்கள் காலியாக உள்ளன.

தற்போதைய நியமனத்தில் G.R.சுவாமிநாதன் என்ற மதுரையைச் சேர்ந்த R.S.S பார்ப்பனர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரையும் சேர்த்து தலைமை நீதிபதி உட்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 11 நீதிபதிகள் பார்ப்பனர்கள்.

இது மொத்த நீதிபதிகள் பணியிடங்களில் 20% க்கு மேல் ஆகும். மக்கள் தொகையில் சுமார் 1% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் 20% க்கு மேல் பதவிகளில் இருப்பது என்ன சமூக நீதி?

கொள்கைக்கட்சிகள் என்று கருதிக்கொள்ளும் தி.மு.க, மார்க்ஸிஸ்ட் உட்பட எந்த அரசியல் கட்சிகளும் இந்த சமூகஅநீதிக்கு எதிரான நிகழ்வுக்கு எதிராகப் போராட வில்லை. குரல் கொடுக்கவில்லை. அப்படிக் குரல் கொடுத்தாலும் அடையாளப் போராட்டங்களால் எதுவும் மாறிவிடப் போவதில்லை.

பார்ப்பன நீதிபதிகள்

  1. இந்திரா பானர்ஜி, 2.T.N.பிரகாஷ், 3. வைத்தியநாதன், 4. K.K.சசிதரன், 5. நூட்டி ராம் பிரசாத் ராவ், 6. ராஜீவ்சக்தர், 7. அனிதா சுமந்த் ( இவர் TV க்களில் விவாதங்களில் வரும் சுமந்த் சி ராமன் அவர்களின் துணைவியார்), 8. R.சுப்பிரமணியன், 9. C.V.கார்த்திகேயன், 10.N.சேசஷாயி, 11. G.R.சுவாமிநாதன்

இப்படிப் பார்ப்பனர்களை அவர்களது மக்கள் தொகை அளவுக்கும் அதிகமாக நீதிபதிகளாக வர விடுகிறோம். பிறகு, நீட் தேர்வில் உச்சநீதிமன்றம் உத்தர விடுகிறது, மாட்டிறைச்சிக்கு எதிராக உத்தரவிடுகிறது எனப் பல்வேறு சிக்கல்களுக்காக போராடிக்கொண்டே இருக்கிறோம். அரசியலில் மட்டும் பார்ப்பனர்களுக்கு எதிரான மாற்றம் கொண்டு வர எண்ணுவது பார்ப்பனர்களை எந்த வகையிலும் பாதிக்காது. அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம், ஊடகங்கள், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களுக்கு மாற்று உருவாக வேண்டும். அந்த நிலைதான் சமுதாய விடுதலை.

அரசியலில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் அனைத்தும் மாறிவிடும் என்ற மனநிலையை தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா அவர்களே!

  1. பெரியார் அவர்களின் மக்களின் கொள்கைகளை அரசியலுக்குச் சென்று அமல்படுத்தப்போகிறேன் என்று பெரியாரின் கொள்கைக்கு முரணாக அதாவது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே அரசியலில் சாதிக்கப்போய் தோற்றுப் போனார்.
  2. பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஆட்பட்டுள்ள சமூகம், சாதிய அடிப்படயிலான சமூகம், ஆணாதிக்கச் சமூகம் என்கிற அடிப்படையிலான சமூகத்திடம் எந்தப் பண்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஓட்டுக்குப் போய் நின்று, படிப்படியாக கொள்கைச் சமரசமாகிப்போய், இச்சமூகத்தில் உள்ள அத்தனை அழுக்குகளையும் உள்ளடங்கிய அரசியல் கட்சியாகிப்போனதுதான் மிச்சம்.
  3. கொள்கைபோய் பணம் சேர்ப்பதுதான் கொள்கை எனமாறி தேசியக் கட்சிகளிடமிருந்து ஊழலையும் ஒழுங்கீனத்தையும் பெற்று, வழக்குகளுக்குப் பயந்து மாநில உரிமைகளை அடகு வைத்ததுதான் மிச்சம்.

“அரசியலும்,பொருளாதாரமும் சமூகம் பெற்ற பிள்ளைகளே தவிர வேறில்லை. சமூகத்தில் வேலை செய்யாமல் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது” – தோழர் பெரியார்

எனவே நம் உழைப்பு சமூக மாற்றத்துக்கே இருக்க வேண்டும். சமுதாய இயக்கங்கள் தான் அரசியல் அமைப்புகளை இயக்க வேண்டும். சமுதாயம் மாறினால், அதன் எதிரொலியாக, சட்டம், நீதி, நிர்வாகம், ஊடகம், அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்துத் தளங்களிலும் தானாக மாற்றம் உருவாகும். அப்படி இல்லை அரசியலால் எல்லவற்றையும் மாற்றி விடமுடியும் என்று எந்த அரசியல்கட்சி நண்பர்கள் கூறினாலும், அதை வரவேற்கிறேன். கூறுவதைச் செயலில் காட்ட முயற்சி செய்யுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.