மாட்டுக்கறி வித் கள்ளு: பா.ஜ.க வின் மூன்று ஆண்டு சாதனை விளக்க விருந்துக்கு அழைப்பு

மோடி அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக, இந்தியா முழுவதும் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ.க விற்குள்ளேயே மிகக்கடுமையான எழுந்துள்ளன. ஏற்கனவே மேகாலயா பா.ஜ.க வின் கிழக்கு காரோ மாவட்டத் தலைவர் Bernard Marak என்பவர் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகப் பதவி விலகிவிட்டார். இன்று, மேகாலயா பா.ஜ.க வின் கிழக்கு காரோ மாவட்டத் தலைவர் Bachu Marak அவர்களும் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார்.

பதவி விலகியது மட்டும் முக்கியத்துவம் கொண்ட செய்த அல்ல. அதையும் தாண்டி அவர்து முகநூல் பக்கத்தில் ஒரு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்புதான் திராவிடர் பண்பாட்டின் வீர அடையாளம்.

அதாவது, வரும் ஜூன் 10 ஆம் நாள் மேகாலயா மாநிலம் டுரா என்ற நகரத்தில் ஆர்.பி. ஏடன் என்ற இடத்தில்  “Bitchi and Beef party” என்ற பெயரில் ஒரு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பா.ஜ.க அரசின் மூன்று ஆண்டு சாதனையை விளக்கி இந்த விருந்து நடக்க உள்ளது.  Bitchi என்றால், மேகாலயாவில் பயன்படுத்தப்படும் கள்ளு ஆகும். நம்ம ஊர் சுண்டக்கஞ்சி போல அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மது வகை.

கள்ளுடனும் மாட்டிறைச்சியுடனும் பா.ஜ.க வின் சாதனை விளக்க நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. அதற்கு கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர் களுக்கு ரூ 200, இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு ரூ 100, நடந்து வருபவர்களுக்கு ரூ 50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதவி விலகிய பெர்னார்டும் இதில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த, கள்ளு வித் மாட்டுக்கறி விருந்துக்கு மேகாலய மாநில பா.ஜ.க தலைமையும், அகில இந்திய தலைமையும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஆனால் பதவி விலகியவர்களோ,

“மாட்டிறைச்சி என்பது எங்கள் பண்பாடு, பா.ஜ.க வின் மதச்சார்பின்மைக்கு எதிரான போக்கை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளனர். மேகாலயா, நாகாலாந்து போன்ற வடமேற்குப் பகுதிகளில் பயணம் செய்தால், அவர்களின் பல பண்பாடுகள் திராவிடர் பண்பாட்டோடு இணைந்து நிற்பதைக் காணலாம். அதன் மற்றொரு வெளிப்பாடு தான் “Bitchi and Beef party”. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கூட வெறும் மாட்டுக்கறி விருந்துகள் தான் நடந்தன. மேகாலயா நாகர்கள் நம்மை விஞ்சிவிட்டார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.