பார்ப்பானுக்குத் தங்கம் – மார்வாடிக்கு வெளிநாட்டு வாழ்க்கை – தமிழனுக்கு மாட்டு மூத்திரம்: ‘அட்க்ஷய த்ருதியை’

அதி அசுரன்

‘அட்க்ஷய’ என்றால் ‘வளர்தல்’, ‘பெருகுதல்’ என்று பொருள். ‘த்ருதியை’ என்றால், ‘மூன்றாம் நாள்’ என்று பொருள். அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை நாட்களில் மூன்றாம் நாள் என்பது தான் அட்சய த்ருதியை. இந்துமதப் புராணங்களில் இந்தப் பண்டிகைக்கு எராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று:

வடநாட்டில், ஏழை வைசிய இனத்தில் பிறந்த ஒருவன், ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் புனித நதியில் நீராடி, பார்ப்பனர்களுக்குத் தான தர்மங்கள் செய்தானாம். அதனால் மறுபிறவியில் அரசனாகப் பிறந்தானாம். அப்போதும் அட்சய திருதியை நாளில் தொடர்ச்சியாகப் பார்ப்பனர் களுக்குத் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்தானாம். அவற்றால், மென்மேலும் வளர்ந்து சிறப்புப் பெற்றானாம். இவை, ‘பவிஷ்யோத்ர புராணம்’ என்ற புளுகுமூட்டையில் உள்ளது.

இவைபோல, இன்னும் இந்த மடத்தனத்துக்கு ஆயிரத்தெட்டு விளக்கங்கள், புராணங்கள் உள்ளன. அவை, பார்ப்பானுக்குத் தானம் செய். நீ பிச்சை எடுக்கும் நிலையில் வாழ்ந்தாலும், அரசனாக வாழ்ந்தாலும், பார்ப்பானுக்குத் தானம் செய்வதை மறக்காதே! யாகங்கள் செய்வதைக் கடமையாகக் கொள்! என்பதைத் தான் நமக்கு போதிக்கின்றன.

இப்படி ஒரு பண்டிகையை ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். முக்கியமாக தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள் என்று கருதிக்கொள்ளும் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நாளில் தங்கம் வாங்கினால், தங்கம் பெருகும், செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கை நம்மிடம் இல்லை. பார்ப்பனர்களும், வணிகக்கொள்ளை வெறிபிடித்த பனியாக்களும், தமிழ்நாட்டு நகைக்கடை முதலாளிகளும் இணைந்து இப்படி ஒரு விழாவை ஊதிப்பெருக்கி உள்ளனர்.

பார்ப்பனர்களுக்குக் கொட்டிக் கொடுத்த தமிழ் வேந்தர்கள்

அடுத்த கட்டமாக, இன்னும் சில ஆண்டுகளில் ‘பவிஷ்யோத்ர புராணம்’ கூறியதைப் போல அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி, ஒரு கிராம் தங்கத்தையாவது ஒரு பார்ப்பானுக்குக் கொடுத்தால் தான் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்று ஒரு கதையைக் கிளப்பத்தான் போகிறார்கள். நம் மறத் தமிழர்களும் அந்தக் கடமையைப் பக்தியோடு, தவறாமல் செய்யத்தான் போகிறார்கள்.

நான் கூறுவது நடக்காத கற்பனை அல்ல. நம் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும், பல்லவர்களும், நம் நாட்டுச் செல்வத்தைப் பார்ப்பானுக்குத் தாரை வார்த்த முட்டாள்தனத்தை சங்க இலக்கியக் காலங்களிலேயே தொடங்கியவர்கள் தானே? இவர்கள் மட்டுமல்ல; இந்தியப் பகுதியில் உள்ள அனைத்துத் தேசத்து மன்னர்களும் பார்ப்பனர்களுக்குக் கப்பம் கட்டியவர்கள் தான்.

அட்க்ஷய த்ருதியைக்கு அரசு விடுமுறை!

அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்றால், அதை நம்பி கடந்த ஆண்டுகளில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் வாழ்கிறார்களா? அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களிடம் ஒரு சர்வே நடத்துவோம். ஒரு அய்ந்து ஆண்டு தொடர்ச்சியாக அந்த மூன்றாம் நாளில் தங்கம் வாங்கியவர்களுக்கு வருமானவரிக்கணக்கை ஆராய வேண்டும். வருமானம் கூடியிருக்கிறதா? கடன் கூடியிருக்கிறதா? எனக் கண்டுபிடித்துவிடலாம்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது உண்மையானால், அப்படி நம்பும் மக்களுக்கு – தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இந்த நாளில் தங்கம் வாங்கியவர்களுக்கு – ரேசன் கார்டு, சமையல்எரிவாயு மானியம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம், விவசாயக்கடன்கள், அடமானக்கடன்கள், 100 நாள் வேலைத்திட்டம் எல்லாவற்றையும் நிறுத்திவிடலாம். இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன், டி.வி, மின்சாரம் அனைத்தையும் நிறுத்திவிடலாம்.

இந்த நாளில் தங்கம் வாங்கியவர்களுக்கு இனி வங்கிகள் எதுவும் எந்தக் கடனும் வழங்க வேண்டியதில்லை. இந்த நம்பிக்கையாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வங்கிகளில் கடன் வழங்க வேண்டியதில்லை. பள்ளி கல்லூரிகளில் கல்விக்கான ஸ்காலர்ஷிப் எல்லவாற்றையும் நிறுத்திவிடலாம்.

இந்த ஊதாரித்தனப் பண்டிகைளை நம்புபவர்கள் மேற்கண்டவைகளைப் போன்ற இன்னும் அதிகமான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த முட்டாள்தனத்தையும், ஊதாரித்தனத்தையும் கைவிடவேண்டும்.

மானமும், அறிவுமுள்ள அரசாங்கம் அமைந்தால் இதைப் போன்ற நடவடிக்கைகளில் இறங்கும். இல்லாவிட்டால் கூடிய விரைவில் அட்சய திருதியைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் தங்கம் வாங்க போனஸ்கூட அறிவிக்கப்படும். இப்போது ஆயுதபூஜை கொண்டாடும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு பார்ப்பான் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொருவரிடமும் ஒரு கிராம் தங்கத்தையாவது கொள்ளை அடித்துக்கொண்டு போவான். நமது தமிழர்கள் பதிலுக்கு அவர்கள் தரும் மாட்டுமூத்திரத்தை பக்தியோடு வாங்கிக் குடித்துக் கொண்டு போவார்கள்.

கடன்கார நாடாக்கிய அட்சய திருதியை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் என்பது நமது அறிவுக்கும், நம் வீட்டுப் பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிப்பதோடு நிற்பதில்லை. இந்த நாட்டையே கடன்கார நாடாக்கி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாளில் மட்டும் விற்பனையாகும் தங்கத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. 2016 ஆம் ஆண்டு அட்சய நாளில் 18000 கிலோ, 18 (டன்) தங்கம் விற்பனை ஆகியுள்ளது. 2017  ஏப்ரல் 29 இல் அந்த அளவு அதிகமாகி 23,500 கிலோ (23.5 டன்) விற்பனை ஆகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு விற்பனைத்தொகை 6,113.4 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வடநாட்டு பனியாக் கும்பலுக்குச் சேர்ந்துள்ளது. (The Economic Times 03.05.2017)

2016 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 700 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017 இல் அதிகமாகி 900 டன் என்ற அளவைத் தொட்டது. ( Business-standard 09.07.2017)

இந்தியா உலகில் மிகப்பெரும் கடன்கார நாடாக இருப்பதற்கு, வெளிநாடுகளிலிருந்து அதிகமான பொருட்களை இறக்குமதி செய்வதுதான் மிக முக்கியக் காரணம். நமது உழைப்பு, பொருளாதாரம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அந்நியச்செலாவணியாக வெளியேறி விடுகிறது.

வெள்ளையர்கள் இங்கு நேரடியாக ஆட்சி நடத்திச் சம்பாதித்ததைவிட மிக மிக அதிகமாக உலகத்தில் உள்ள எல்லா நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களும், அவரவர் நாட்டில் உட்கார்ந்து கொண்டே நம்மைக் கொள்ளையடிக்கின்றன. நாமே அதை விரும்பி அனுமதிக்கிறோம். இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் முதல் இடத்தில் இருப்பது பெட்ரோலியப் பொருட்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தங்கம் இறக்குமதி தான். இந்த இரண்டையும் குறைக்காமல் நாடு ஒரு அங்குலம்கூட முன்னேற முடியாது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலும், தங்கமும் இறக்குமதி செய்யப்படும் அளவு உயர்ந்து கொண்டே போகிறது.

அட்சய திருதியை கொண்டாடுவதால் இந்தியாவின் கடன் உயருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. அதாவது இந்தியப் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. ஒவ்வொரு குடிமகனின் கடன்சுமை கூடிக்கொண்டே போகிறது. தங்கம் வாங்குபவர்கள் கடன்காரர்களாகி வருகிறோம். தங்கத்தை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தேசிய வணிக முதலைகளும் கொளுத்து வருகிறார்கள்.

நீரவ் மோடிகளை உருவாக்கிய பார்ப்பனப் பண்பாடு

2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை, நம் நாட்டுக்குத் தங்கம் இறக்குமதி செய்யும் வேலையை அரசுப் பொதுத்துறை நிறுவனங்களான Metals and Minerals Trading Corporation of India Limited (MMTC), State Trading Corporation (STC) இரண்டும் நடத்திவந்தன. 2014 மே மாதத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், காங்கிரசு அரசு, அந்த இறக்குமதித் தொழிலில், தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் என்ற ஒரு உத்தரவு பிறப்பித்ததாக மோடி அரசு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

தங்க இறக்குமதியில் தனியார் நிறுனங்கள் ஈடுபடலாம் என்ற அறிவிப்பின் விளைவுதான் பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் என்று ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. நீரவ் மோடிக் கும்பலைக் காப்பாற்ற, இப்படி ஒரு தகவல் வெளியிடப்பட்டிருக்கலாம். ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும், காங்கிரசு அரசு அறிவித்த அந்த உத்தரவை, அடுத்த வந்த மோடி அரசு 4 ஆண்டுகளாக நீக்காமல், அதை அப்படியே பின்பற்றி வந்தது ஏன்? எப்படியோ, எந்தக் கட்சி இந்த ஊழலுக்குத் துணை போனது என்பது வேறு விவாதம்.

நம்மைப் பொறுத்தவரை, அந்நியச் செலாவணி மூலம் நாம் கடன்காரர்களாகியது ஒரு புறம் என்றால், நீரவ் மோடி போன்ற தங்க வணிகர்களுக்கு 13,540 கோடி ரூபாய் அளவுக்குக் கொட்டிக் கொடுத்து நாட்டை விட்டு வெளியே பத்திரமாக அனுப்பியும் உள்ளோம் என்பது தான் கவனிக்க வேண்டிய செய்தி. ((The Economic Times 05.04.2018)

தமிழ்நாட்டு அளவில், தங்க வணிகத்தில் ஈடுபட்டிருந்த கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன இயக்குனர் பூபேஷ் குமார் ஜெயின், அவரது மனைவியும் மற்றொரு இயக்குனருமான நீட்டா ஜெயின், ஏகே லுனாவத் அசோஸியேட்ஸ் நிறுவனத்தின் பங்காளிகளான தேஜ்ராஜ் ஆச்சா, சுமித் கேடியா போன்ற மார்வாடி, பனியாக்கும்பல்  சுமார் 824 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனைச் செலுத்தாமல் தப்பியுள்ளனர்.

தங்கம் என்ற ஒரு உலோகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அளவுகடந்த மோகம் மற்றும் நமது மூடநம்பிக்கை இரண்டும் தான் இவ்வளவு ஊழலுக்கும் – நமது கடன்காரப் பட்டத்திற்கும் காரணம் என்பதை நாம் அறிய வேண்டும்.  (Finacial Express 21.03.18)

சங்க இலக்கியங்களில் அட்சய திருதியை?

தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடும் விழா என்றால், அதன் பெயரே தமிழில் இல்லை என்ற நிலையில் இந்தப்பண்டிகை எப்படி நமக்கான பண்டிகையாக இருக்கும்? ‘திராவிடர்கள்’ என்ற சொல் சங்கஇலக்கியங்களில் கிடையாது அதனால், நாம் திராவிடர்களே அல்ல’ என்ற ரீதியில் தமிழ்த்தேசியம் பேசும் தோழர்கள் இந்த ‘அட்க்ஷய த்ருதியை’களை எதிர்ப்பதில்லை. ‘அட்க்ஷய த்ருதியை’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் இது தமிழர்களுக்கான விழா அல்ல என்று இதுவரை பேசிக் கேட்டதில்லை.

காதலர் தினம் என்ற விழா, நுகர்வு வெறியை வளர்க்கிறது. முதலாளித்துவத்தின் அடையாளமாக உள்ளது என்று வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள், ஒவ்வொரு ஆண்டும் 6113 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடக்கும் நுகர்வுக்கொள்ளைக்குக் காரணமான இந்த அட்சய திருதியைக்கு இதுவரை எதிர்ப்புகளைத் தெரிவித்துப் பார்த்ததில்லை. தலித்தியம் – பெளத்தம் பேசும் அமைப்புகளும், இந்து மதத்தின் இதுபோன்ற சீரழிவுப் பண்பாடுகளை வெளிப்படையாக எதிர்த்துப் பரப்பரைகளை மேற்கொள்ள வேண்டும். (ஆதித்தமிழர் பேரவை மட்டும் தீபாவளியை எதிர்த்துப் பரப்புரைகளை நடத்துகிறது.)

இனிமேலாவது முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த அட்க்ஷய த்ருதியைகளையும், இதன் பின்னால் உள்ள பார்ப்பன நலன்களையும் – இந்திய தேசிய முதலாளிகள் – தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கல்யாண் ஜூவல்லரி போன்ற அனைத்து முதலாளிகளின் வணிகக் கொள்ளையையும் எதிர்த்துப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பன – பன்னாட்டு வணிக நிறுவனங்கள் – இந்திய தேசிய வணிக நிறுவனங்கள் – தமிழ்நாட்டுத் தங்க வணிகப் பெருமுதலாளிகளின் கூட்டுக்கொள்ளையை முறியடிக்க வேண்டும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.