ஜெயேந்திரர் வழக்கும் தினகரன் வழக்கும்: சில கேள்விகள் – மௌ.அர.ஜவஹர்

  1. மேல்முறையீடு கர்நாடகம் மட்டும் ஒழுங்காகச் செய்தது ஏன் புதுச்சேரி மேல்முறையீடு செய்யவில்லை? (தப்பும் தாறுமாகச் செய்து பெட்டிசன் ரிஜக்ட் ஆனவுடன் அமைதியாக இருந்து கொண்டது)
  2. போனில் பேரம் பேசினார் என்பதால் தினகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார். சரி. நீதிபதியிடமே பேரம் பேசினார் ஜெயேந்திரர் என்பது உறுதி செய்யப்பட்டும் நான்கு வருடங்களாகக் கைது செய்யப்படாதது ஏன்?
  3. ஜெயேந்திரர் வழக்கில் உள்ள இந்தப் பாகுபாட்டை எதிர்த்து B.J.P நியாயவான்கள் போராடுவார்களா?
  4. கொலை செய்தாலும்கூட பார்ப்பான் என்றால் ஒரு நீதி, கொலையே செய்யாவிட்டாலும் பார்ப்பனரல்லாதோருக்கு ஒரு நீதியா?

இதுதானா மனு நீதி? எங்கே உள்ளது மனித நீதி?

சொத்துக்குவிப்பு வழக்கில் கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்புக்குப்பின் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்து தண்டனையும் வாங்கித்தந்துள்ளது.

ஆனால், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரின் மீதான வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்குப் பின், புதுச்சேரி அரசால் அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படவில்லை. (மேல் முறையீட்டு மனுவைத் தப்பும் தாறுமாக பெட்டிசன் செய்து அது தள்ளுபடி ஆனவுடன் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது புதுச்சேரி அரசு)

தொலைபேசி உரையாடல் பதிவாகி உள்ளது என்ற குற்றச்சாட்டில் தற்போது திகார் சிறையில் இருக்கிறார் தினகரன். (இன்னும் குரல் பரிசோதனை நடைபெறவில்லை.)

ஆனால் நீதிபதியிடம் பேரம் பேசியது ஜெயேந்திரர்தான் என்று உறுதி செய்யப்பட்டு நான்கு வருடங்களாகியும் ஒரு துரும்புகூட அவர்மீது படாமல் காத்து கைது செய்யாமல் இருப்பது ஏன்????

“மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்டா

ப்ராஹ்மணானாம் வீதீயதே

இதரோஷ்ம்து, வர்ணானாமதண்ட;

ப்ராணாந்தி கோபவேத”

இதன் பொருள்: பிராமணர் அல்லாதவர்கள் கொலைசெய்தால், அவர்களைத்  தூக்கிலிட வேண்டும். பிராமணன் கொலை செய்தால் அவனது தலை மயிரை மட்டும் மொட்டையடித்தாலே போதும். அதுவே தண்டனையாகும். இது மனு வாக்கியம்.

இதனடிப்படையில்தான் ஜெயேந்திரருக்கு அனுகூலங்கள் நடைபெறுகின்றனவா???

எஸ்.ஏ.வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ் (ஆங்கிலேயர் காலத்து ஐ.ஏ.எஸ்) பார்ப்பனர் இலஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர்நீதி மன்றத்தால் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிக் காப்பாற்ற முயன்றன.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் ஒரு பார்ப்பனர் மீது வந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி பிராமணன் கொலை செய்திருக்கவே மாட்டான்’ என்று சாட்சிகளையே பார்க்காமல் இனத்தை மட்டும் பார்த்து தீர்ப்பளித்தார்.

இராசகோபாலாச்சாரியார் உள்நாட்டு அமைச்சராக இருந்தபோது பெங்களூர் ராஜூ என்ற கொலைக் குற்றவாளியை அன்றைய சபாநாயகர் அனந்தசயன அய்யங்காரைப் பயன்படுத்தி கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்தார்.

என்பது போன்ற வரலாறுகள் நமக்கு என்ன உணர்த்தியதோ, அதேதான் இந்த ஜெயேந்திரர் வழக்கும் நமக்கு உணர்த்துகிறது. பார்ப்பன ஆதிக்கம் மட்டுமில்லை பார்ப்பன மனு தர்ம ஆட்சியேதான் நடைபெறுகிறது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.