காதலியைத் தேடி அமெரிக்கா செல்லும் C I A: திரைவிமர்சனம்

CIA Comrade_in_America

Sanoop Stephen, Arasur, Coimbatore

ரெண்டு மூணு மாசமா நான் எதிர்பார்த்திட்டிருந்த படம் மலையாள சினிமாவுக்கே உரிய எதார்த்தங்கங்களை உள்ளடக்கிய படம்.

தோழர் கார்ல்மார்க்ஸ்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் படம் தொடங்குகிறது. துடிப்புமிக்க இளம் கம்யூனிஸ்ட் தோழராக துல்கர்சல்மான். அவரது தந்தை கேரளா காங்கிரஸ் நிர்வாகி. ஆளும் கட்சியான காங்கிரஸின் அமைச்சருக்கு எதிராக தீவிரப் போராட்டங்களை முன்நின்று நடத்துபவர் துல்கர். அதனால் கம்யூனிஸ்ட் தோழர் களிடத்திலும் கல்லூரியிலும் மாஸாக வலம்வருகிறார். துல்கருக்கும் அவர் கல்லூரியில் படிக்கும் அமெரிக்கா ரிட்டன் பெண்ணிற்கும் பாத்ததும் காதல் வழக்கம்போல அவள் வீட்டில் எதிர்ப்பு. இரவோடு இரவாக துல்கருக்குத் தெரியாமல் அவள் உறவினரால்  அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். இதைத்தெரிந்து கொள்ளும் துல்கர் கோபத்தில் அவள் உறவினர் வீட்டிற்குச் சென்று அவமானப்பட்டுத் திரும்புகிறார். இதனிடையில் அமெரிக்காவில் இருந்து அவள் தொலைபேசியில் துல்கரைத் தொடர்புகொண்டு எனக்குத் திருமணம் நிச்சயம் செய்துள்ளார்கள். இன்னும் 15 நாளில் திருமணம், நீ எப்படியாவது இங்க வந்து என் பெற்றோர்களிடம் பேசு என்று சொல்கிறாள்.

பாஸ்போட் கூட இல்லாத துல்கர் தன் காதலுக்காக எப்படியும் அமெரிக்கா செல்ல தீர்மானிக்கிறார். நண்பர்களின் உதவியுடன் அவசரமாக ஒரு பாஸ்போட்டை ஏற்பாடு செய்கிறார். ஆனால் விசா குறிப்பிட்ட நாளில் கிடைப்பது சாத்தியமில்லாததால் நண்பரின் உதவியுடன் மெக்ஸிக்கோ வழியாக குறுக்கு வழியில் அமெரிக்கா செல்லத்திட்டமிட்டுக் கிளம்புகிறார். பல சிரமங்களுக்கு இடையில் விதிமுறை களுக்குப் புறம்பாக அமெரிக்கா செல்கிறார். இதனிடையில் தன் மனதை மாற்றிக் கொண்ட காதலி அவள் பெற்றோர் பார்த்த மாப்பிளையைத் திருமணம் செய்யச் சம்மதித்ததைத் தன் நண்பரின் முலம் அறியும் துல்கர் வேதனைப்படுகிறார். அவர் நண்பர் மற்றும் தந்தையின் அறிவுறைகளுக்குபின் சமாதானமாகிறார். தன் தந்தை கூறியதைப்போல தன் காதலியின் திருமணத்திற்குச் செல்கிறார். பிறகு தன்னுடன் பயணித்த ஒரு பெண்ணுடன் நாடு திரும்புகிறார். இவ்வளவுதான் படத்தின் கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான். வீட்டில் தந்தையும் மகனும் தங்கள் கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை மாத்தி மாத்தி கலாய்ப்பதும் இடையில் மோடியை கலாய்ப்பதெல்லாம் மலையாள சினிமாவில் மட்டுமே காணமுடியும் காட்சிகள். திரையில் காண்பிக்கப்படும் மாஸான காட்சிகளில் எதார்த்தத்தை மீறாததால் அந்தக் காட்சிகள் எல்லாம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதும் துல்கரின் அறிமுகக்காட்சியெல்லாம் வேற…லெவல் முகத்தில் சேகுவேரா என்ற வாசகத்தை எழுதிய துணியைக்கட்டி செங்கொடி பிடிச்சு வரும் காட்சிக்கு தியேட்டரே அதிரும்.

இரண்டாம் பாதியில் நாம் செய்திகளில் அடிக்கடி பார்க்கும் பஞ்சம் மற்றும் பல்வேறு காரணங்களால் சொந்தநாட்டில் வாழமுடியாமல் புலம்பெயரும் அகதிகளின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாகக் காட்டியிருக்கிறார்கள் அகதியாகவோ அல்லது திருட்டுத்தனமாகவோ மற்றநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருப்பதை அற்புதமாக விளக்கியிருக்கிறார் இயக்குனர். இது இந்திய சினிமாவிற்கே புதிது. வாழ்த்துக்கள்!!!

மெக்சிக்கோ செல்லும் துல்கர் எதுமே தெரியாத புதிய ஊரில் சிறு குழப்பத்தில் எங்க போறதுன்னு தெரியாம சுத்திமுத்தி பாத்திட்டிருப்பார். அப்போ அவர் கண்ணுக்குப்படும்  செங்கொடியைப் பார்த்ததும் அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும் ஒரு தெளிவையும் அற்புதமாகக் காமிச்சிருப்பாங்க. Like தொலஞ்சுபோன குழந்தை அதன் அம்மா முகத்தைப்பார்த்ததைப்போல்!

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவ்வளவு எதார்த்தமாக இருக்கு. குறிப்பா ஈழத் தமிழராக வரும் தமிழ் நடிகர் ஜான்விஜய். அவரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் ரசிக்கவைத்துக் கலங்கடிக்கும். இங்க, தமிழ் சினிமாவிலே காட்ட பயப்பபடும் என் தலைவன் பிரபாகரனின் படத்தையும் அவர் வழிநடத்திய இயக்கத்தின் பேரையும் ஒரு மலையாளப்பட இயக்குனர் தையிரியமாக பயன்படுத்தியிருக்கிறார் #Salute

காதலியின் திருமணத்திற்குத் துல்கர் போகும் காட்சி அங்கு இடம்பெறும் வசனமெல்லாம் சண்டையேயில்லாத ஹீரோயிசம். இயக்குனர் கண்டிப்பா ஒரு கம்யூனிஸ்ட்காரராகத்தான் இருப்பார். ஒவ்வொரு ஒவ்வொரு வசனமும் அவ்வளவு ஷார்ப். முதல்பாதியில் காமெடிகலந்த எதார்த்தமான வசனங்களும் இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான வசனங்களும் குறிப்பாக பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். கார்ல்மார்க்ஸ் பிறந்ததினத்தில் இந்தப்படம் வந்துள்ளதால் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இரட்டைவிருந்து!!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.